ராஜபக்ஷே - தமிழீழ விடுதலைப்புலிகள் - அதன் தலைவர் பிரபாகரன் - அங்கு நடக்கும் உரிமைப்போர் .................
பிரபாகரனை எத்தனை பேர் நம் தமிழ்நாட்டில் - இந்தியாவில் ஏற்றுக்கொள்வார்கள் என்னும் கேள்வி நம்மில் பலருக்கு இருக்கிறது. அந்த கேள்விக்கு விடை காணும் முயற்சியே இந்த கட்டுரையின் நோக்கம்.
பொதுவாக, இங்கே தான் நாம் - நம் அரசியல்வா(வியா)திகள் தவறு செய்து இருந்திருக்கிறோம். சரி, ஒரு விஷயம் முதலில் பார்ப்போம்; முதலில் நீங்கள் ஒரு அமைப்பின் அங்கமாக இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த அமைப்பு சார்ந்த முடிவுகளை நீங்கள் தான் எடுக்க வேண்டும். மற்றவர் அல்லர். உங்கள் தலைவர் யார் - உங்கள் அமைப்பின் நோக்கம் என்ன - என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேன்டும்.
ஈழத்தமிழர்கள் தனி இனம்; அவர்கள் தமிழினமாக இருந்தாலும்! இந்தியத் தமிழர்கள் தனி இனம். ஆங்கிலேயர் நாட்டை விட்டு நீங்கி சுதந்திர காற்றை இந்திய, இலங்கை நாடுகள் சுவாசிக்க ஆரம்பித்த பின்பு,இந்தியாவில் தமிழர்கள் மத்திய அரசில் சிறந்த இடம் வகிக்க முடிந்தது/முடிகிறது. மாறாக, இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு இன்னல்கள் அதிகமாகியது.
அவர்கள் சிங்கள அரசால், பின் இராணுவத்தால் எண்ணற்ற துயரை அடைந்தார்கள்; அந்த நேரத்தில் வந்தவர்கள் தான் பிரபாகரனின் விடுதலைப் புலிகள். அவர்கள் மீது ஈழவர்களுக்குத் தனி மதிப்பும் மரியாதையும் உண்டு! புலிகளும் அவர்கள் நம்பிக்கைக்கு ஏற்றபடியே நடந்து வருகிறார்கள், இதுவரை - சிறுசிறு பிரச்சினைகளைத் தவிர!
இந்த காலகட்டத்தில், இந்தியத் தமிழர்களாகிய நம்மைச்சுற்றி என்ன நடந்தது/இப்போது என்ன நடக்கிறது என்பதையும் நாம் பார்க்கவேன்டும். இந்திரா தலைமையிலான இந்திய அரசு, தமிழ்ப்போராளிகளை அதரவளித்து வளர்த்தது. புலிகள் அமைப்பினரும் அதில் மிகுந்த பயன் பெற்றவர்கள். பின்னாளில் ராஜீவ் காந்தி தலைமையிலான அரசு வேறு மாதிரி சிந்திக்க ஆரம்பித்து, போராளிகளுக்கு எதிரான நிலையை எடுத்தது; இலங்கை அரசுக்கு உதவியது. அது இன்றும் தொடர்கிறது. இதனால் நமக்கு ராஜீவ் மரணம் பேரிழப்பாக அமைந்தது.
ராஜீவ் மரணமடைந்த பின் வந்த காங்கிரஸ் அரசு, அந்த ஐந்தாண்டுகளில் ராணுவ நடவடிக்கையில் இலங்கை அரசுக்கு உதவி புலிகள் மீதும் பிரபாகரன் மீதும் நடவடிக்கை எடுத்திருந்தால், மத்திய அரசின் மீது இன்றைக்கு இருக்கிற எதிர்ப்பு அப்போது இருந்திருக்காது. ஆனால் ஒன்றை மறந்து விடக்கூடாது, அப்போதும், இலங்கை அரசால் ஈழத்தமிழர்கள் பெரும் துயரில் தான் இருந்திருப்பார்கள். இப்போது உள்ள எதிர்ப்பைக் காட்டும் முனைப்பைப் போல் கண்டிப்பாக அப்போது இருந்திருக்காது. சிறுசிறு எதிர்ப்புக்கள் இருந்திருக்கும் - அவைகளை ஒன்று சேர்க்கும் சக்தி மட்டும் குறைவாக இருந்திருக்கும்.
சரி, கடந்த கால அலசல்களை விட்டு விட்டு நிகழ்கால யதார்த்தத்திற்கு வருவோம். இலங்கை இராணுவத்திற்கு எதிரான போரில் புலிகள் பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்திருக்கிறார்கள். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெரும் இந்த போரால் குறிப்பிடத் தக்க எண்ணிக்கையில் ஈழ மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கும் கனடா அமெரிக்கா நாடுகளுக்கும் புலம் பெயர்ந்திருக்கிறார்கள். ராஜீவ் மரணத்திற்குப் பிறகு தமிழ்நாட்டுக்குப் புலம் பெயர்தல் குறைந்திருக்கிறது - காரணம் வெளிப்படை - அகதிகளில் புலிகளோ/ அவர்களது ஆதரவாளர்களோ கலந்திருக்கலாம் என்ற நம் அரசுகளின் அச்சம் அவர்களுக்குத் துன்பமேற்படுவதாக இருப்பதால்.
இதே வேளையில் நம் தமிழ்நாட்டில் மக்கள் நிலைமை எப்படி இருக்கிறது என்று பார்த்தோமே ஆனால், அது பிரமிக்கத் தக்க முன்னேற்றம்! அரசியல்வாதிகளில் சிலர் - அதிகாரிகளில் சிலர் என்று இருந்த கையூட்டு இப்போது மக்களிடமும் சென்று விட்டது. இதிலும் நம் தமிழர்கள் தாங்கள் நேர்மையானவர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதிகம் பணம் கொடுக்கும் கட்சிக்கு வாக்கு - என்ன ஒரு நேர்மையான வளர்ச்சி பாருங்கள்!
புலிகள் அனைவரையும் அழித்து விடும் முனைப்புடன் தன் இந்தியா உள்பட அண்டை நாடுகளின் உதவியுடன் தீவிர தாக்குதலை ஆரம்பித்தது ராஜபக்ஷேவின் இலங்கை. தனி நாடு கோரிக்கையைக் கைவிடாதிருக்கும் ஒரே ஒரு பெரிய இயக்கமாக புலிகள் இருந்தாலும் அங்குள்ள பெரும்பான்மை மக்களின் விருப்பமும் அதுதான். அவர்களுக்கு இலங்கை அரசு மீதான கசப்புணர்வு இந்த காலகட்டங்களில் வளர்ந்தே வந்திருக்கிறது - அல்லது அரசு உங்கள் எதிரி இல்லை என்று தன் த்மிழ் மக்களிடம் விளங்க வைக்காமல் போனது; இந்த விஷயம் சாத்தியமற்றதாகப் போவதற்குச் சிங்கள - புத்த மத தீவிரவாதிகளே காரணம். கண்டிப்பாக இன்றைய சூழலில் அவர்கள் மாறப்போவதில்லை; எனவே தமிழ்மக்களின் அரசு மீதான வெறுப்பும்.
போர்த் தீவிரமடைய, புலிகளைக் கொல்வதாகச் சொல்லி அப்பாவித் தமிழர்களையும் இலங்கை அரசு கொன்று குவிக்க, தமிழ்மக்களின் கண்டனக்குரல்கள் ஒன்றிணைந்தன. தமிழ்நாட்டிலும் இது எதிரொலிக்க ஆரம்பித்தது.
இந்நிலையில், நம்மில் பலருக்கு, பிரபாகரனை எத்தனை பேர் நம் தமிழ்நாட்டில் - இந்தியாவில் ஏற்றுக்கொள்வார்கள் என்னும் கேள்வி இருக்கிறது. இங்கே தான் நாம் - நம் அரசியல்வா(வியா)திகள் - தவறு செய்து இருந்திருக்கிறோம். சரி, ஒரு விஷயம் முதலில் பார்ப்போம்; முதலில் நீங்கள் ஒரு அமைப்பின் அங்கமாக இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த அமைப்பு சார்ந்த முடிவுகளை நீங்கள் தான் எடுக்க வேண்டும். மற்றவர் அல்லர். உங்கள் தலைவர் யார் - உங்கள் அமைப்பின் நோக்கம் என்ன - என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேன்டும்.
ஈழமக்கள் அனைவரும் தனி நாட்டை விரும்புகின்றனர்; அதற்காகப் போராடும் புலிகளை விரும்புகின்றனர்; பிரபாகரனின் தலைமையை விரும்புகின்றனர்.
இந்தியத் தமிழர்களாகிய நாம் இப்போது ஈழத்தமிழர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும்; ஆதரவளிக்க வேண்டும்; இல்லையென்றால் குறைந்த பட்சம் அமைதியாகவாவது இருக்க வேண்டும். அவர்களுக்குத் தீர்வு ஒன்றைச் சொல்கிறேன் பேர்வழி என்று அவர்களின் உணர்வுகளை மிதிக்கக் கூடாது - நம்மிடையே உள்ள அறிவுஜீவிகளைப் போல.
நம் மக்களும் யாழ் நிகழ்வுகளைப் பார்த்து வருத்தத்தில் இருக்கிறார்கள்; நம் அரசியல்வாதிகள் யாழ் நிகழ்வுகள் மூலம் மக்களிடம் வாக்கு அறுவடை செய்வது எப்படி என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஒன்று நிச்சயம்! புலம்பெயர்ந்த தமிழர்களின் போராட்டம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தீவிரமடைந்திருக்கிறது:அதனால் அவர்கள் வாழும் நாடுகளின் அரசாங்கமும் அதற்கான முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது; இலங்கைக்கு நெருக்கடி அதிகமாகி வருகிறது; அதனால் இந்தியா தலையிடாமலேயே நல்லதொரு தீர்வு கிடைக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஆனால் ஜெ. தன் பிரச்சாரத்தில் சொல்வது போல ராணுவ நடவடிக்கை மூலம் தனி ஈழத்தை எட்டி விட முடியாது; சீனாவும் ரஷ்யாவும் இலங்கையை ஆதரிப்பதனால் - ஒரு வேளை இந்தியா ஜெ சொல்வது போல ராணுவ நடவடிக்கை எடுக்க முயலுமானால் - குறிப்பாக சீனா இலங்கைக்கு ஆதரவாக நேரடி படையுதவி செய்யப் போவதாகச் சொல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம்.
அதனால் நம் அரசியல் வாதிகள் அமைதியாக இருப்பதே இப்பிரச்சினையைப் பொறுத்தவரை உத்தமம்.
Thursday, April 30, 2009
Subscribe to:
Posts (Atom)